ஹாலிவுட் உலகில் லேட்டஸ்ட் திகில் வரவு 'ஒன் மிஸ்ட் கால்'.
பெத் ரேமண்ட் தனது நண்பர்கள் இருவர் மர்மமான முறையில் பயங்கரமான மரணத்தைச் சந்தித்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார்.
இறந்த நண்பர்களின் கடைசி வினாடிகளை அவர்களின் செல்பேசிகள் பதிவு செய்துள்ளன. மேலும் அவர்கள் இறப்பதற்கு ஒருநாளுக்கு முன்பு மர்மமான அழைப்புகளை ஏற்றிருப்பதும் தெரியவருகிறது.
இதனால் குழப்பமடையும் காவலர்கள் மேற்கொண்டு விசாரணையை துப்பறிவாளர் ஜேக் ஆண்ட்ரூசிடம் ஒப்படைக்கிறார்கள்.
ஆண்ட்ரூசின் தங்கையின் மரணமும் பெத்துடைய நண்பர்களின் மரணமும் ஒன்றுபோல் உள்ளதை அடிப்படையாக வைத்து விசாரணை தொடர்கிறது.
இறுதியில் ஆண்ட்ரூசும் பெத்தும் இணைந்து மர்மச் செல்பேசி அழைப்புகளின் மர்மத்தை அவிழ்க்கின்றனர்.
உண்மையை நெருங்கும் கடைசி நிமிடத்தில் ஆண்ட்ரூஸ் தனது செல்பேசி அலறியதை கவனித்து எடுக்கிறார். ஆனால், அழைப்பு துண்டிக்கப்பட்டு 'ஒன் மிஸ்டு கால்' செய்தி தெரிகிறது.
ஜேக் ஆண்ட்ரூசாக எட் பர்ன்சும், பெத் ரேமண்டாக கானின் சோசமானும் நடித்துள்ள இப்படத்தை எரிக் வேலட் இயக்கியுள்ளார்.