நான் நன்கு நடனமாடுவேன் : அல் பசீனோ!

Webdunia

வெள்ளி, 15 ஜூன் 2007 (16:46 IST)
ஓஷன் தர்ட்டின் படத்தின் கதாநாயகன் அல் பசீனோ, தனக்கு நன்கு நடனமாடத் தெரியும் என்றும், மற்ற நட்சத்திரங்களுடன் இணைந்து நடனமாடவும் தயார் என்றும் கூறியுள்ளார்!

திரைப்பட இதழ் ஒன்றிற்காக ரசிகர் ஒருவர் கேட்ட 10 கேள்விகளில் ஒன்றிற்கு பதிலளிக்கையில் இவ்வாறு அல் பசீனோ கூறியுள்ளார்.

திரைப்படத்தில் நடனமாடுமாறு வற்புறுத்தினால் நான் ஆடத் தயார். ஆனால், நான் கூச்ச சுபாவம் உடையவன். அது எந்த அளவிற்கு என்னை அனுமதிக்கும் என்று தெரியவில்லை என்று பதிலளித்துள்ளார் 67 வயதான இந்த கதாநாயக நடிகர். (ஏ.என்.ஐ.)

வெப்துனியாவைப் படிக்கவும்