பிரகாஷ்ராஜை அழவிட்ட பாலா

வியாழன், 27 மார்ச் 2014 (10:37 IST)
FILE
பல விஷயங்களுக்காக அழ வைக்கப்பட வேண்டியவர்தான் பிரகாஷ்ராஜ். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அப்படத்தின் இயக்குனரின் நாடி நரம்பு தளர்ந்து போகிற அளவுக்கு டார்ச்சர் செய்வது பிரகாஷ்ராஜின் வாடிக்கை.

ஒன்றுமில்லை... பத்து மணி ஷுட்டிங்கிற்கு சாவகாசமாக இரண்டு மணிக்கு வருவார். அட, இரண்டு மணிக்கு வந்தாலாவது நல்லாயிருக்குமே... மனுஷன் பல நாள்கள் வரவே மாட்டார் என அலுத்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். இந்த டார்ச்சர் குறித்து விலாவரியாக தெரிய பூலோகம் பட இயக்குனரை அணுகலாம். சித்திரவதைக்குள்ளான சமீபத்திய இயக்குனர்.

நம்ம மேட்டருக்கு வருவோம். பிரகாஷ்ராஜ் மும்மொழிகளில் தயாரித்து இயக்கி நடித்து வரும் உன் சமையலறையில் படத்துக்கு இளையராஜாதான் இசை. பாலாவின் தாரை தப்பட்டைக்கும் ஞானிதான் சங்கீதம்.
FILE

சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்துக் கொண்ட போது தாரை தப்பட்டை படப்பாடல்களை பிரகாஷ்ராஜுக்கு போட்டு காண்பித்தாரம் பாலா. அதைக் கேட்டதும் அப்படியே உருகிப் போய் கண்ணீர் மல்கியதாக பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். அந்தளவு இசையில் வசியம் வைத்திருந்தாராம் இசைஞானி.

இம்சைக்காக அழ வேண்டியவர் இசைக்காக அழுதிருக்கிறார்.

இசையே அழ வைத்தது என்றால் படத்தில் கதற வைப்பார்களா பாலாவும், ஞானியும்?

வெப்துனியாவைப் படிக்கவும்