ஆர்யா, அமலா பால் திருமணம் செய்யும் காட்சி சினிமாவுக்காக படமாக்கப்பட்டது.
FILE
ஆர்யா, அமலா பால் திருமணம் செய்து கொண்டதாக சில மீடியாக்கள் திடீர் பரபரப்பை கிளப்பின. ராஜா ராணி படத்தின் போது ஆர்யா, நயன்தாரா திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்பட்ட அதே விளம்பர ஸ்டண்ட்தான் இது. ஒரே வித்தியாசம்.
ராஜா ராணியில் படம் சம்பந்தப்பட்டவர்களே - குறிப்பாக இயக்குனர் அட்லீயே திட்டமிட்டு அப்படியொரு போலி செய்தியை பரப்பினார். சினிமாவில் இடம்பெறும் காட்சியை நிஜமாக நடந்தது போல் மலிவான விளம்பரம் செய்யப்பட்டது.
FILE
ஆர்யா, அமலா பால் விவகாரத்தில் பரபரப்புக்கு சில ஊடகங்களே காரணம்.
பார்த்திபன் சினிமா பின்னணியில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் கௌரவ வேடத்தில் நடிக்க பலரும் சம்மதித்தனர். விஜய் சேதுபதி தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏற்கனவே நடித்துவிட்டார்.
ஆர்யா, அமலா பால் திருமணம் செய்து கொள்வது போல் இந்தப் படத்துக்காக ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதை வைத்தே இப்படியொரு பரபரப்பை சிலர் கிளப்பினர். அதில் பார்த்திபனுக்கு எந்த சம்பந்தமும் இல்லையாம்.
ரசிகர்கள் இதுபோன்ற மலிவான விளம்பரங்களை உதாசீனப்படுத்தினால்தான் இவைகளை கட்டுப்படுத்த முடியும்.