செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்கின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி ஜோடி என்பதால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே செல்வராகவனின் படம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
FILE
இரண்டாம் உலகம் தோல்வி காரணமாக தனது பரீட்சார்ந்த முயற்சிகளை மூட்டைகட்டி தனது வழக்கமான பாணியில் படங்களை இயக்குவது என்று முடிவு செய்துள்ளார் செல்வராகவன்.
ஹீரோ சிம்பு. ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது த்ரிஷாவின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
FILE
விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்பு, த்ரிஷா ஜோடியை காவிய ஜோடியாக்கியது. அவர்கள் மீண்டும் செல்வராகவனின் படத்தில் ஒன்றிணைவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.
FILE
புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு செல்வராகவன், யுவன் மத்தியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக யுவன் செல்வராகவன் பிரிந்தனர். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்தார். இரண்டாம் உலகத்தின் பாடல்கள் ஹnரிஸ், பின்னணி இசை அனிருத்.
செல்வராகவன், யுவன் ஒன்றிணைவதும் இந்தப் புதிய படத்தை முக்கியமாக்குகிறது. ரேடியன்ஸ் மீடியா படத்தை தயாரிக்கிறது.