தமிழில் வெளியாகும் சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ்

புதன், 5 மார்ச் 2014 (19:44 IST)
இவ்வளவு நாள் இந்தப் படத்தை எப்படி விட்டு வைத்தார்கள்? இளைஞர்களை எழுச்சி பெற வைக்கும் எல்லாமே இந்தப் படத்தில் இருக்கிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டால் அவளோட ராவுகள், அஞ்சரைக்குள்ள வண்டி மாதிரி அசராமல் ஓடி வசூலை அள்ளும்.
FILE

சென்ற வருடம் சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ் என்ற பெயரில் இந்தியில் ஒரு படம் வெளியானது. செக்ஸ் விழிப்புணர்வு படம். இதுபோன்ற விழிப்புணர்வு படங்கள் எந்த நோக்கத்தில் எடுக்கப்படும் என்பது யாரும் அறியாதது அல்ல. வடக்கே வாழ்வாங்கு ஓடிய படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

FILE

படத்தில் நிறைய கிளைக்கதைகள் உண்டு. பள்ளி செல்லும் மாணவனும், மாணவியும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். மாணவியின் சகோதரி பாலியல் மருத்துவர், மாணவனின் சகோதரனும் மருத்துவர். இவர்களுக்கும் சில செக்ஸ் பிரச்சனைகள். வீட்டு வேலைக்காரிக்கும் அதுபோல் ஒரு பிரச்சனை.

சுருக்கமாக பாலியல் பிரச்சனைகள் ஆறாக ஓடக்கூடிய கதை. அதனை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
FILE

நல்ல தமிழ்ப் பெயராக தேடுகிறார்களாம். காமத்துபால் சரியாக வருமா?

FILE



வெப்துனியாவைப் படிக்கவும்