தெகிடி, ஆஹா கல்யாணம் யுஎஸ்ஏ வசூல்

புதன், 5 மார்ச் 2014 (14:20 IST)
அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்திருக்கும் தெகிடி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல் வாசகர்களுக்கு இப்படம் பிடிக்கும். பி.ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார்.
FILE

யுஎஸ்ஏ யில் படம் முதல் வார இறுதியில் - அதாவது முதல் மூன்று தினங்களில் ஏழு திரையிடல்களில் 7,774 டாலர்களை பெற்றுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 4.82 லட்சங்கள். யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இதற்கு 78 வது இடம்.

ஆஹா கல்யாணத்துக்கு பாக்ஸ் ஆபிஸில் 137 வது இடம். சென்ற வாரம் ஒரு திரையிடலில் 114 டாலர்களை மட்டுமே Nலித்துள்ளது. இதுவரை இதன் யுஎஸ்ஏ வசூல் 4,346 டாலர்கள். ரூபாய் மதிப்பில் 2.70 லட்சங்கள்.
FILE

ஆஹா கல்யாணத்தின் தெலுங்கு பதிப்பின் கலெக்ஷன் இதைவிட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்