கோச்சடையான் – புஸ்ஸான தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கை

திங்கள், 3 மார்ச் 2014 (10:39 IST)
கோச்சடையானின் விளம்பர மற்றும் வெளியீட்டு திட்டங்கள் மிரட்டுகின்றன. ரஜினி படம் தவிர்த்து வேறு ஒரு நடிகரின் படத்துக்கு இப்படியொரு விளம்பரம் கிடைக்குமா என்பது சந்தேகம்.
FILE

கோச்சடையான் பாடல்கள் மார்ச் 9 காலை பத்து முப்பது மணிக்கு சென்னை சத்யம் சினிமாஸில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் தமிழ் மட்டுமின்றி தெலுங்குப் பதிப்பின் பாடல்களும் வெளியிடப்படுகிறது. அத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழி ட்ரெய்லர்களும் வெளியடப்படுகின்றன.

இதே விழாவில் கோச்சடையான் படத்தின் ஸ்பான்சர்களும் தங்களின் புராடெக்டை வெளியிடுகின்றனர். கார்பன் மொபைலின் புதிய கோச்சடையான் மாடல் மொபைல், இன்னொரு ஸ்பான்சரான ஹங்கம்மா ஆன் லைனின் மொபைல் கேம்ஸ் ஆகியவையும் வெளியிடப்படுகிறது. இந்த ஸ்பான்சர்கள் மட்டும் பதினைந்து கோடி அளவுக்கு விளம்பரங்கள் செய்ய உள்ளனர்.

இதுதவிர இன்னொரு ஸ்பான்சரான பாரத் பெட்ரோலியம் தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் உள்ள தனது 3650 பெட்ரோல் பங்குகளில் கோச்சடையான் ஹnர்டிங், பேனர்கள் வைக்க உள்ளது.

சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், சின்ன படமோ பpய படமோ ஒரு படத்தின் விளம்பரச் செலவு நாற்பது லட்சங்களை தாண்டக் கூடாது என அறிவித்தார். கோச்சடையானின் ஸ்பான்சர்கள் அதனை ஒரே நாளில் காலி செய்துவிட்டனர்.

ரஜினி படம் மற்ற படங்களின் விதிமுறைகளுக்குள் அடங்காதவை, அடக்க முடியாதவை என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்