அவரா ரஜினிபட இயக்குனர்...?

வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (12:51 IST)
கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை யார் இயக்குகிறார்கள்?
FILE

இந்தக் கேள்வி கொஞ்நாளாக பதில் தெரியாமல் கோடம்பாக்கத்தை சுற்றுகிறது. கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், கே.வி.ஆனந்த் என்று சாத்தியமான எல்லா ஆப்ஷன்களும் பேசப்பட்டன. நாலு கல்லு அடிப்போம் எந்த கல்லில் மாங்காய் விழுந்தாலும் லாபம் என்ற மனநிலையில் மீடியாவால் முன் வைக்கப்பட்டதுதான் இந்தப் பெயர்கள்.

இந்த விவகாரத்தில் தேவையில்லாம் நம் பெயர் எதுக்கு என்று கே.எஸ்.ரவிக்குமார், நான் ரஜினியை இயக்கவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். ஜக்குபாய் ட்ராப், ராணா ட்ராப் என்று தொடர்ந்து ட்ராப்பான ஏமாற்றத்தின் வாசனை அந்த அறிக்கையில் அடித்தது. ஆனால் உலகம்தான் உருண்டையாச்சே.
FILE

இறுதியில் பந்து கே.எஸ்.ரவிக்குமாரின் கோர்ட்டுக்கே வந்துள்ளது. கடந்த சில நாள்களாக ரஜினியை இயக்கப் போவது ரவிக்குமார் என்ற பேச்சு கேட்க ஆரம்பித்துள்ளது. ஆனால் அது கைவிடப்பட்ட ராணா கிடையாது. ரஜினியின் இன்றைய உடல்நிலையை கருத்தில் கொண்டு எழுதப்படும் புதிய ஸ்கிரிப்படாக இருக்கும்.

எதையும் ரஜினியோ சம்பந்தப்பட்டவர்களோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குவது யார் என்ற கேள்வியின் தற்காலிக பதிலாக கே.எஸ்.ரவிக்குமார் இருப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்