அம்மா உணவகம், அம்மா வாட்டர்... அடுத்து அம்மா தியேட்டர்

வியாழன், 20 பிப்ரவரி 2014 (08:50 IST)
FILE
அம்மா திட்டம் அம்மா வாட்டரிலிருந்து அம்மா தியேட்டருக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்துவதுதான் ஒரு அரசின் தலையாய கடமை. அதில் தவறும்போது தவறை திருத்திக் கொள்வதுதான் நல்ல நடைமுறை. தமிழக அரசால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. பதிலாக அம்மா உணவகம், அம்மா வாட்டர் என்று போட்டியாக வியாபார நிறுவனங்களை நடத்துகிறது. இதன் தொடர்ச்சிதான் அம்மா திரையரங்குகள்.

திரையரங்குகளுக்கும் சினிமாவுக்கும் சரித்திர முக்கியத்துவம் உண்டு. சினிமா அறிமுகமான பிறகே ஒரு கலையை எல்லா சாதியினரும் ஒரே அரங்கில் பார்க்கின்ற சமநிலை உருவானது. பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஒரு திரையரங்கில் ஆண்டையும், அடிமையும் ஒரே நேரத்தில் படம் பார்க்கிற சமத்துவம் நிலவியது. ஆனால் இன்று...?

வர்க்கரீதியாக திரையரங்குகள் மக்களை பிரித்துள்ளன. சென்னையில் இயங்கும் மாயாnல், சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ்களிலும் சிட்டி சென்டர் போன்ற மால்களில் இயங்கும் திரையரங்குகளிலும் ஒரே பிரிவைச் சார்ந்தவர்களே படம் பார்க்கின்றனர். அடித்தட்டு மக்களை அங்கு காண முடிவதில்லை. மல்டிபிளக்ஸ்களின் ட்ரெஸ் கோடும், அவற்றின் அதிகபடி விலையும், பகட்டும் எளிய மக்களை அண்டவிடுவதில்லை.

இது ஒருபுறம் என்றா ல் எளிய மக்களின் கொண்டாட்ட வெளிகளாக இருந்த சிறிய திரையரங்குகள் நஷ்டத்தால் இடிக்கப்பட்டு கல்யாண மண்டபங்களாகவும், nப்பிங் காம்ப்ளக்nகவும் உருமாறி வருகின்றன. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் இயங்கும் அம்மா திரையரங்குகளை உருவாக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன் வைத்துள்ளது.

திரையரங்குகள் வசூலிக்கும் நிர்ணயிக்கப்பட்டதைவிட பலமடங்கு அதிகபடியான டிக்கெட் கொள்ளையை தடுத்தாலே பொதுமக்களால் நியாயமான டிக்கெட் கட்டணத்தில் படம் பார்க்க முடியும். அதைவிடுத்து குறைவான கட்டணத்தில் படம் பார்க்க அம்மா திரையரங்குகளை கட்டுவது தும்பைவிட்டு வாலை பிடிக்கும் முயற்சி. இதனால் தமிழ் சினிமாவுக்கு எவ்வித நன்மையும் வந்துவிடாது என்பதே உண்மை.

வெப்துனியாவைப் படிக்கவும்