ஃபென்டாஸ்டிக் ஷூட்டிங் டேய்ஸ் - கார்த்திகா

வெள்ளி, 14 பிப்ரவரி 2014 (20:11 IST)
அருண் குமார் நடிப்பில் உருவான வா டீல் படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்து கடந்த 12ஆம் தேதி பூசணிக்காய் உடைத்தனர்.

தடையற தாக்க படத்துக்குப் பிறகு அதிக கதைகள் கேட்டு அருண் விஜய் சலித்தெடுத்து தேர்வு செய்ததுதான் இந்தப் படம். டீல் என்று பெயர் வைத்தவர்கள் என்ன காரணமோ திடீரென வா டீல் என பெயரை மாற்றி இதுவும் தமிழ்ப் பெயர்தான் என சொல்லத் தொடங்கினர். 30 சதவீத வரிச்சலுகைக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்ற அடிப்படை அரிச்சுவடிகூட தெரியாவிட்டால் எப்படி?
FILE

படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் மறக்க முடியாத ஃபென்டாஸ்டிக் ஷூட்டிங் டேய்ஸ் எனவும் கார்த்திகா ட்வீட் செய்திருக்கிறார். மறந்துவிட்டோமே. கோ-வில் அறிமுகமான பிறகு இவருக்கு கிடைத்த ஒரே தமிழ்ப்பட வாய்ப்பு இந்தப் படம்தான்.

சிவ ஞானம் இயக்கியிருக்கும் வா டீலின் சிறப்பம்சம் அதன் ஆக்சன் காட்சிகள். அருண் விஜய் உண்மையாகவே உயிரைப் பணயம் வைத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

எஸ்எஸ் தமன் இசையமைக்க ஃபெதர் டச் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.

கோடை விடுமுறையில் வா டீல் திரைக்கு வரவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்