அஞ்சானில் விவேக்

புதன், 12 பிப்ரவரி 2014 (17:50 IST)
FILE
அஞ்சான் படத்தில் காமெடி ஏரியாவை கவர் செய்யப் போகிறவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. அவர் விவேக்.

விவேக்கின் காமெடி காலாவதியாகி அவரின் ஒன் லைன் கருத்துக்கு ரசிகர்கள் ஜண்டு பாம் தடவத் தொடங்கி நாளாகிறது. அதனால்தான் ஹரி தனது சிங்கம் 2 படத்தில் விவேக்குடன் சந்தானத்தையும் மெயின் டிஷ்ஷாக பரிமாறினார்.

இந்நிலையில் அஞ்சானில் தனி காமெடியனாக அதகளம் செய்யவிருக்கிறாராம் விவேக். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவை போன்றதுதான் இந்த வாய்ப்பு. லிங்குசாமியின் இயக்கத்தில் ரன் படத்தில் விவேக் நடித்தார். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அஞ்சானில்.

சூர்யா, சமந்தா நடிக்கும் அஞ்சானின் படப்பிடிப்பு முழுக்க மும்பையில் நடக்கிறது. யுவன் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்