சென்னை ஏர்போர்ட்டில் விஜய்யின் சேஸிங் காட்சி

புதன், 12 பிப்ரவரி 2014 (12:56 IST)
இந்திய விமான நிலையங்களில் படப்பிடிப்பு நடத்த எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. அதனால் வெளிநாடுகளுக்குதான் தமிழில் படமெடுப்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
FILE

ஆச்சரியமாக விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்துக்கு சென்னை விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்துள்ளது.

கொல்கத்தாவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அங்கேயும் எடுத்தது துரத்தல் காட்சிதான். கொல்கத்தா தெருக்களில் விஜய் வில்லனை துரத்தும் காட்சி இரவு நேரத்தில் படமாக்கப்பட்டது.

படத்தின் இரண்டாவதுகட்டப் படப்பிடிப்பு இன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்குகிறது. இங்கும் விமான ஓடுதள பாதையில் துரத்தல் காட்சியை முருகதாஸ் படமாக்குகிறார். விஜய்யுடன் படத்தின் வில்லன் டோட்டா ராயும் கலந்து கொள்வார் என தெரிகிறது.

சமந்தா இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளார். இசை அனிருத். வில்லன் சம்பந்தப்பட்ட சிறைக் காட்சியை ஆந்திராவில் படமாக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்