அபராதம் கட்டிய அஞ்சான் டீம்

செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (18:14 IST)
லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அஞ்சான் படத்தை இயக்கி வருகிறார். சூர்யா, சமந்தா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க மும்பையில் நடக்கிறது. சமீபத்தில் ஒரு பாடல் காட்சியை படமாக்கினர்.
FILE

ராஜு சுந்தரம் நடனம் அமைத்த இந்தப் பாடலில் ஆடிய நடனக் கலைஞர்கள் அனைவரும் சென்னையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை நடனக் கலைஞர்கள் பிரச்சனை செய்தனர். அடிக்கவும் பாய்ந்தனர்.

எந்த மாநிலத்தில் படப்பிடிப்பு நடக்கிறதோ அந்த மாநிலத்தில் உள்ள நடனக் கலைஞர்களை, தொழிலாளிகளை, சண்டைக் கலைஞர்களை முப்பது சதவீதமாவது பயன்படுத்த வேண்டும். அஞ்சானில் அதை கடைபிடிக்கவில்லை என ரகளையில் அவர்கள் ஈடுபட்டனர்.
FILE

இறுதியில் அறுபதாயிரம் ரூபாய் அபராதம் கட்டியது அஞ்சான் டீம். அதன் பிறகே படப்பிடிப்பை நடத்த அனுமதித்தனர்.

இதே நிலைமைதான் கர்நாடகா, ஆந்திரா எங்கும். அப்படியிருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என்று பெயர் வைக்காமல் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என பெயர் வைத்துள்ளனர்.

எவ்வளவு அடி வாங்கினாலும் நாம் திருந்துவதாக இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்