அதை மட்டும் சொல்ல மாட்டேன்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:30 IST)
ஹிந்தி ட்ராஃபிக் சிக்னலில் அறிமுகமான நீது சந்திராவை தமிழுக்கு அழைத்து வந்தவர் விக்ரம் கே.குமார். அவரது யாவரும் நலம் படத்தில் நீது ஹீரோயின். அதன் பிறகு யுத்தம் செய்யில் ஒரு பாடலுக்கு நடனம். பிறகு ஆதிபகவனில் மீண்டும் ஹீரோயின்.
FILE

நீதுவின் தென்னிந்திய டவுண்ட்அப் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் விக்ரம் கே.குமாரே அவரின் ரீ என்ட்ரிக்கும் பொறுப்பேற்றுள்ளார்.

தெலுங்கில் விக்ரம் கே.குமார் இயக்கி வரும் படம் மனம். மறைந்த நாகேஸ்வரராவ், அவரின் மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறை நடிக்கும் படம். அதில் முக்கியமான வேடத்தில் நடிக்க நீதுவை அணுகினார் விக்ரம். கதையே சொல்ல வேண்டாம் உங்க படம்னா நடிக்க தயார் என கப்பென்று வாய்ப்பை பிடித்துக் கொண்டார். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட அதிக சாத்தியமுள்ளது.

இந்தப் படத்தில் நாக சைதன்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

விரைவில் தமிழில் முன்னணி நடிகர் ஒருவரது படத்தில் நீது சந்திரா நடிக்க உள்ளார். அவர் யார்?

இப்போதைக்கு விஷயம் பேச்சுவார்த்தை அளவில் இருப்பதால் உறுதியான பிறகே யார் என்பதை சொல்வாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்