ரிவைஸிங் கமிட்டிக்கு செல்லும் ஆஹா கல்யாணம்

திங்கள், 10 பிப்ரவரி 2014 (14:43 IST)
யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம் ஆஹா கல்யாணத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் ரிவைஸிங் கமிட்டிக்கு செல்ல முடிவு எடுத்துள்ளனர்.
FILE

ஹிந்தியில் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த பேண்ட் பஜா பாராத் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ஆஹா கல்யாணம். அதில் ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா நடித்த வேடத்தை நானியும், வாணி கபூரும் தமிழில் செய்துள்ளனர். இசை தரண்.

ஃபெப்ரவரி 21 படத்தை வெளியிடும் திட்டத்துடன் தணிக்கைக்குழுவுக்கு படம் திரையிடப்பட்டது. சில நெருக்கமான காதல் காட்சிகள் காரணமாக படத்துக்கு யுஏ சான்றிதழ் தந்துள்ளனர்.

யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகை கிடைக்கும். ஆஹா கல்யாணம் போன்ற மிடில் பட்ஜெட் படங்கள் தப்பிப் பிழைக்க 30 சதவீத வரி விலக்கு கண்டிப்பாக தேவை.

அதனால் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்ப தீர்மானித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்