செக் மோசடி - மனோபாலாவுக்கு பிடிவாரண்ட்

செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (12:59 IST)
FILE
செக் மோசடி வழக்கில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா உள்பட மூன்று பேருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இன்சைட் எண்டர்டெயின்மெண்ட் மீடியா லிமிடெட் நிறுவனத்தில் மனோபாலா பங்குதாரர். மற்ற இருவர் நாக்ரவி, பொன்னுசாமி ரவிகணேசன். இன்சைட் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களின் போஸ்டர்களை மெட்ராஸ் சபையர் பிரிண்டர்ஸ் அச்சடித்து தந்துள்ளது. கோடம்பாக்கத்தில் தயாராகும் முக்கால்வாசி படங்களின் போஸ்டர்கள் இங்குதான் அச்சாகின்றன. காசு இல்லை பிறகு தருகிறேன் என்று சொல்லும் சினிமாக்காரர்களுக்கு கடன் தரும் சில நிறுவனங்களில் மெட்ராஸ் சபையரும் ஒன்று.

இவர்களுக்கு இன்சைட் எண்டர்டெயின்மெண்ட் 4 லட்சம் பாக்கி வைத்துள்ளது. அதற்காக தந்த செக்கும் பணமில்லாமல் திரும்பியிருக்கிறது. பல நாள்கள் கேட்டும் பணம் பெயராததால் வேறு வழியின்றி செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்கள். இதன் விசாரணைக்கு பங்குதாரர்கள் மூன்று பேருமே ஆஜராகவில்லை.

அதனால் மூவருக்கும் பிணையில் வெளிவரக் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த மூவரில் மனோபாலா இப்போதுதான் சதுரங்க வேட்டை என்ற புதுப்படத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்