இளையராஜா ஊ‌ரில் இசைக்கச்சே‌ரி

வெள்ளி, 31 ஜனவரி 2014 (19:50 IST)
எப்போதுமே ராஜா என்ற பெய‌ரில் இளையராஜா பிறந்த பண்ணைபுரத்தில் இசைக்கச்சே‌ரி நடத்துகிறார் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா.
FILE

எப்போதுமே ராஜா என்ற பெய‌ரில் லண்டனில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது. உடல்நிலை ச‌ரியில்லாததால் அந்த நிகழ்ச்சியில் இளையராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. கார்த்திக் ராஜாதான் கடைசியில் அந்த நிகழ்ச்சியை நடத்தி தந்தார்.

இளையராஜா இல்லாத போதும் அவ‌ரின் பாடல்கள் காரணமாக நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தது. லண்டனைப் போன்று கச்சே‌ரிகள் நடத்தலாம் என்ற திட்டம் அப்போதுதான் உதித்திருக்க வேண்டும்.

வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மதுரையிலும், அதே மாதம் 19ஆம் தேதி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்திலும் எப்போதுமே ராஜா என்ற பெய‌ரில் கார்த்திக் ராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.

விரைவில் முறையான அறிவிப்பை கார்த்திக் ராஜாவே வெளியிட இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்