டி.ஆரின் வருங்கால மருமகன் எம்.டெக். பட்டதாரி

செவ்வாய், 28 ஜனவரி 2014 (12:16 IST)
FILE
டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமணம் ஃபெப்ரவரி 10 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

டி.ஆரின் மகளும் சிம்பு, குறளரசனின் சகோதpயுமான இலக்கியாவின் திருமணம் சென்னையில் ஃபெப்ரவரி 10 ஆம் தேதி நடக்கிறது. மணமகன் ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். எம்.டெக். பட்டதாரி. பெயர் அபிலாஷ்.

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம் சென்னை லீலா பேலஸில் ஃபெப்ரவரி 10 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று மாலை அதே நட்சத்திர விடுதியில் வரவேற்பு நிகழ்ச்சி. அதில் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

திருமண வேலைகளை டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர், மகன்கள் சிலம்பரசன், குறளரசன் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்