திலீபனின் ஜோடி அமலா

வியாழன், 23 ஜனவரி 2014 (19:38 IST)
FILE
தொண்ணூறுகளில் தமிழக இளைஞர்களில் ச‌ரிபாதி பேர் அமலாவின் ரசிகர்கள். சத்யாவில் வரும் வளையோசை பாடலை அமலாவுக்காக ‌ரிப்பீட் செய்யும் அமலா ரசிகர்கள் இன்றும் நிறைய.

அந்த அமலாவின் இடத்தை அமலா பாலால்கூட நிரப்ப முடியவில்லை. புதுமுகம் அமலாவாவது சாதிப்பாரா?

வத்திக்குச்சியில் அறிமுகமான முருகதாஸின் சகோதரர் திலீபன் குத்தூசி என்ற படத்தில் நடிக்கிறார். சிவ சக்தி இயக்கும் இந்தப் படத்தில் திலீபனின் ஜோடியாக நடிப்பவ‌ரின் பெயர் அமலா. இவர் ஒரு நடனக் கலைஞர்.

படத்தை அறிவித்த கையோடு கள்ளக்குறிச்சி பக்கம் படப்பிடிப்பை தொடங்கிவிட்டது குத்தூசி டீம். மொத்தம் 20 நாட்கள் நாள்கள் படப்பிடிப்பு நடத்துவதாக திட்டம். கிராமத்து ஆக்சன் மசாலாவாக குத்தூசி தயாராகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்