விபத்தில் சிக்கிய ஷாருக்கான்

வியாழன், 23 ஜனவரி 2014 (18:13 IST)
FILE
நடிகர் ஷாருக்கான் ஃபராகானின் ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார். ஜோடி தீபிகா படுகோன். ஓம் சாந்தி ஓம் படத்துக்குப் பிறகு ஷாருக், ஃபராகான், தீபிகா படுகோன் இணையும் படமிது.

இன்று நடந்த படப்பிடிப்பின்போது ஹோட்டல் அறைக்கதவு இடித்ததில் hருக்கானின் தலையிலும், முகத்திலும் அடிப்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் இந்த விபத்து நடந்ததாக ஷாருக்கானின் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், காயமடைந்த அவர் தற்போது நலமாக உள்ளதாகவும், பயப்படும்படி எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்