மீண்டும் இளையராஜா இசையில் பாலா படம்

வியாழன், 23 ஜனவரி 2014 (12:00 IST)
FILE
தனது அடுத்தப் படத்துக்கு மீண்டும் இளையராஜாவை நாடியிருக்கிறார் பாலா.

சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய பாலாவின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நந்தாவும், அவன் இவனும் யுவன் ஷங்கர் ராஜா. கடைசிப் படம் பரதேசி ஜி.வி.பிரகாஷ்.

பரதேசிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷையே பாலா வைத்துக் கொள்வார் என பலமான நம்பிக்கை கோடம்பாக்கத்தில் வீசியது. மாறாக மீண்டும் இளையராஜாவிடம் பாலா திரும்பியிருக்கிறார்.

பாலா அடுத்து கரகாட்டத்தை மையப்படுத்திய படத்தை எடுக்கிறார். சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது. கிராமிய இசை தேவைப்படும் இந்தப் படத்துக்கு இளையராஜாவே சரியான சாய்hக இருப்பார் என மீண்டும் அவரை தேடிப் போயிருக்கிறார் பாலா.

விரைவில் படம் குறித்த முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்