சமீரா ரெட்டி திடீர் திருமணம்

புதன், 22 ஜனவரி 2014 (11:56 IST)
நடிகை சமீரா ரெட்டி நேற்று மாலை திடீர் திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ரகசியமாக திடீர் திருமணம் செய்தது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
FILE

வாரணம் ஆயிரம் படத்தில் கௌதம் வாசுதேவ மேனனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சமீரா ரெட்டி. அசல், வெடி, நடுநிசி நாய்கள், வேட்டை படங்களிலும் நடித்தார். அவருக்கும் தொழிலதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் கடந்த டிசம்பpல் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரலில் திருமணம் என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில்...

நேற்று மாலை அவசரமாக சமீராவும், அக்ஷய்யும் திருமணம் செய்து கொண்டனர். மும்பையில் பாரம்பரிய முறைப்படி இவர்கள் திருமணம் நடந்தது. குடும்ப உறுப்பினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
FILE

ஏப்ரலில் திருமணம் நிச்சயித்திருந்த நிலையில் திடீர் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்