பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார்

புதன், 22 ஜனவரி 2014 (09:03 IST)
தெலுங்கு சினிமா பேரிழப்பை சந்தித்துள்ளது. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 89.
FILE

1924 செப்டம்பர் 20 ஆம் தேதி பிறந்த நாகேஸ்வரராவ் 1941 ல் வெளியான தர்மபத்னி தெலுங்குப் படத்தின் மூலம் நடிகரானார். மாயபஜார், ஸ்ரீ கிருஷ்ணார்ஜுனா யுத்தம் போன்ற சரித்திரப் படங்களிலும் மிஸ்ஸியம்மா போன்ற காமெடிப் படங்களிலும் நடித்து புகழ்பெற்hர்.

மாய மலை, ஓர் இரவு, சௌதாமினி, பூங்கொடி போன்ற தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ளார். தேவதாஸ் படம் நாகேஸ்வரராவை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது. 1963 ல் வெளியான பெண் மனம் படத்துக்குப் பிறகு தமிழில் நடிப்பதை தவிர்த்தார். சுவர்ண சுந்தரி என்ற ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார்.

நாகேஸ்வரராவின் குடும்பம் ஆந்திர சினிமாவை இயக்கும் மூன்று முக்கிய குடும்பங்களில் ஒன்று. இவரும் இவரது மகன் நாகார்ஜுனாவும், பேரன் நாக சைதன்யாவும் இணைந்து மனம் என்ற படத்தில் நடித்து வந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கம். இந்த வருடம் வெளியாகவிருக்கும் மனம்தான் நாகேஸ்வரராவின் கடைசிப் படம்.

இதற்கு முன் 2011 ல் நயன்தாரா..

பாலகிருஷ்ணா நடித்த ஸ்ரீ ராம ராஜ்ஜியத்தில் நடித்திருந்தார். சென்னையில் சினிமா நூற்hண்டு விழா கொண்டாடப்பட்ட போது சென்னையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு நாகேஸ்வரராவ் பார்ட்டி தந்தார். கமல், மோகன்லால் உள்ளிட்ட ஏராளமான சினிமா கலைஞர்கள் அதில் கலந்து கொண்டனர்.

கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் இன்று அதிகாலை மரணமடைந்தது தென்னக திரைத்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாதது.

வெப்துனியாவைப் படிக்கவும்