முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு வாள் என்று செய்தி வெளியாகியுள்ளது.
FILE
2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி வெளியானது. படம் மொத்தமாக 100 கோடியை தாண்டி வசூலித்தது. விஜய் கேரியரில் இதுவே அதிகபட்சம். அப்போதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது என தீர்மானமானது.
இவர்கள் இணையும் புதிய படத்துக்கு இதுவரை பெயர் வைக்கவில்லை. இந்நிலையில் படத்துக்கு வாள் என பெயர் வைத்திருப்பதாக இன்று வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த பெயர் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை என்கிறார்கள்.
ஐங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.