குடியரசு தினமான ஜான்வரி 26 மூன்று படங்கள் வெளியாகின்றன.
FILE
2014 இரண்டு ஹிட்களுடன் தொடங்கியிருக்கிறது. டப்பா படம் என்றுதான் தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் ஜில்லாவையும், வீரத்தையும் கழுவி ஊற்றின. ஆனால் அவர்களுக்கும் பொதுஜன ரசனைக்கும் நடுவே கிலோ மீட்டர் நீளம். இரண்டு படங்களும் போட்ட முதலைவிட அதிகம் வசூலித்து, சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு மூன்று சக்சஸ் பார்ட்டிகளும் வைத்துவிட்டனர்.
இந்த வருடம் எப்படி அமையும் என்பதை உண்மையில் தீர்மானிக்க இருப்பது ஜான்வரி 26 வெளியாகவிருக்கும் மூன்று படங்கள். இதில் விசேஷம் எந்த முன்னணி நடிகரும் இந்தப் படத்தில் இல்லை. அதேபோல் இயக்குனரும்.
FILE
முதல் படம் மாலினி 22 பாளையங்கோட்டை. மலையாளத்தில் வெற்றி பெற்ற 22 பீமேல் கோட்டயம் படத்தின் ரீமேக். ரீமா கல்லிங்கல் நடித்த மைய கதாபாத்திரத்தில் நித்யா மேனன். ஸ்ரீப்ரியா படத்தை இயக்கியிருக்கிறார். இளம்தலைமுறை ஆஷிக் அபுவின் இயக்கத்தை பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா ஈடுசெய்வாரா என்பதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கும் தோல்விக்குமான நூலிழை சந்தேகம். வைட் ஆங்கிள் படத்தை வெளியிடுகிறது.
இரண்டாவது விஜய் மில்டனின் கோலிசோடா. முதல் படம் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது தந்த அடி காரணமாக கொஞ்சம் இறங்கி அடித்திருக்கிறார் மில்டன். கோயம்பேடு டீன்ஏஜ்கள்தான் கதை மாந்தர்கள். திருப்பதி பிரதர்ஸ் படத்தை வெளியிடுகிறது.
FILE
மூன்றாவது நேர் எதிர். எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நேர் எதிரை வெளியிடுவதால் விளம்பர வெளிச்சம் நேர் எதிருக்கு கிடைத்திருக்கிறது. ஜெயபிரதீப் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ரிச்சர்ட், ஐஸ்வர்யா, வித்யா நடித்துள்ளனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் தயாராகியுள்ளது.
இந்த மூன்று படங்களில் இரண்டு வெற்றிக்கோட்டை எட்டினாலே தமிழ் சினிமா கொஞ்சம் நிமிர்ந்து உட்காரலாம்.