ஜேஎஸ்கே ஃபிலிம்ஸில் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

திங்கள், 20 ஜனவரி 2014 (17:49 IST)
சிம்புதேவன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தின் திரையரங்கு விநியோக உ‌ரிமையை ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.
FILE

ஜேஎஸ்கே ஃபிலிம்ஸ் இன்றைய சூழலில் பல‌ரின் சுமையை இறக்கி வைக்கும் சுமை தாங்கி கல். படம் எடுத்துவிட்டு எப்படி வியாபாரம் செய்வது என்று தடுமாறுகிறவர்களை இவர்கள்தான் தடுத்தாட்கொள்கிறார்கள். விஜய் சேதுபதி நடித்திருக்கும் ரம்மி படத்தின் உ‌‌‌‌‌ரிமையையும் இவர்கள்தான் வாங்கியுள்ளனர். ஜனவ‌ரி 31 ரம்மி வெளியாகிறது.

அதையடுத்து சிம்புதேவனின் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும். அருள்நிதி நடித்திருக்கும் இந்தப் படத்தை அவ‌ரின் தந்தை மு.க.தமிழரசு தயா‌ரித்திருந்தார். அவ‌ரிடமிருந்து விநியோக உ‌ரிமையை ஜேஎஸ்கே வாங்கியுள்ளது.

வானவராயன் வல்லவராயன் படத்தின் விநியோக உ‌ரிமையையும் இவர்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்