கும்பகோணம் செல்லும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் டீம்

ஞாயிறு, 19 ஜனவரி 2014 (17:52 IST)
FILE
இரண்டாம் உலகம் படத்தை தயாரித்து பலத்த அடி வாங்கிய பிவிபி சினிமாவின் அடுத்த வெளியீடு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் காமெடி படம் இது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் கோடி கோடியாக கொட்டிய போது பிவிபி சினிமா தீர்மானித்ததுதான் இந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் புராஜெக்ட். சந்தானம் ஹீரோ என்பது அப்போதே தீர்மானிக்கப்பட்டது. இதுவொரு ரீமேக் படம். அந்த கதையை விளக்க 1923 ஆம் ஆண்டுக்கு செல்ல வேண்டும்.

1923 -ல் பஸ்டர் கீடன் இயக்கத்தில் வெளியான மௌனப் படம், அவர் ஹாஸ்பிடாலிட்டி ஹீரோக்களை வைத்து மட்டுமே ஹிட் கொடுக்கிறார் என எஸ்.எஸ்.ராஜமௌலி குறித்து விமர்சனம் எழுந்த போது பஸ்டர் கீடனின் இந்த மௌனப் படத்தை தெலுங்குக்கு ஏற்ற மாதிரி மாற்றி காமெடி நடிகர் சுனிலை நாயகனாக்கி மரியாத ராமண்ணா என்ற படத்தை ராஜமௌலி எடுத்தார். படம் ஹிட்டானதோடு, யாரை வைத்தும் ஹிட் கொடுக்கக் கூடியவர் என்ற பெயர் ராஜமௌலிக்கு கிடைத்தது.

இந்த கதை தெரியாமல்

தெலுங்கு ரைட்ஸை வாங்கி ஹிந்தியில் மரியாத ராமண்ணாவை அஜய்தேவ் கான் நடிப்பில் சன் ஆஃப் சர்தார் என்ற பெயரில் ரீமேக் செய்தனர். படம் 100 கோடிகளை கடந்து வசூலித்தது. அந்த நேரத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா உலக ஓட்டம் ஓட, மரியாத ராமண்ணாவின் தமிழ் ரீமேக்குக்கு சந்தானம்தான் சரியான ஆள் என்று டிக் செய்தது பிவிபி சினிமா.

மரியாத ராமண்ணாதான் இப்போது சந்தானத்தின் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் தமிழில் ரீமேக்காகி வருகிறது. இதன் அடுத்த ஷெட்யூல்ட் வரும் 21 ஆம் தேதிக்குப் பிறகு கும்பகோணத்தில் தொடங்குகிறது. ஜனவரி 21 சந்தானத்தின் பிறந்தநாள். அதனை கொண்டாடிய பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இரண்டாம் உலகத்தில் பெரிதாக கோட்டைவிட்ட பிவிபி நிறுவனம் இந்தப் படத்தைதான் பெரிதும் நம்பியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்