பாலசந்திரனின் படுகொலையை சொல்லும் புலிப்பார்வை

ஞாயிறு, 19 ஜனவரி 2014 (16:41 IST)
ஈழப்படுகொலையின் ரணமும், நினைவும் தமிழர்களின் இதயத்தைவிட்டு இன்னும் நீங்கவில்லை. அந்த ஆறாத ரணத்தின் வெளிப்பாடாக அவ்வப்போது குறும்படங்களும், ஆவணப்படங்களும் வருவதுண்டு. தமிழ்ச் சூழலில் ஈழத்தை மையப்படுத்தி படம் எடுக்காமல் இருப்பதே உத்தமம். வருகிற படங்களும் அரைகுறை புரிதலுடன் குறைப்பிரசவமாக வெளியாகின்றன. நேர்மையாக எடுக்கிற படம் சென்சாரின் கத்திரியை தாண்டுவது சிம்ம சொப்பனம்.
FILE

இப்படியொரு சூழலில் இயக்குனர் பிரவீன் காந்தி (முன்பு காந்த்) புலிப்பார்வை என்ற படத்தை பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் படுகொலையை மையப்படுத்தி எடுக்கிறார்.

14 வயதான பாலசந்திரனையும் சிங்கள இனவெறி விட்டு வைக்கவில்லை. பாலசந்திரனை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கி கடைசியில் சுட்டுக் கொன்றது சிங்கள ராணுவம். அதற்கு அத்தாட்சியாக வெளியான பாலசந்திரனின் புகைப்படங்கள் அனைத்து மனங்களையும் உலுக்கியது. அந்த சம்பவத்தைதான் பிரவீன் காந்தி புலிப்பார்வை என்ற பெயரில் படமாக்குகிறார்.

இந்தப் படத்தை சென்சார் அனுமதிக்குமா? படம் அந்த கொடுமையின் வீரியத்தை அப்படியே திரையில் காட்டுமா?

புலிப்பார்வை நிறைய கேள்விகளை எழுப்புகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்