வைரமுத்து கோரிக்கை

வியாழன், 16 ஜனவரி 2014 (16:44 IST)
FILE
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று பெசன்ட் நகர் பூங்காவில் இருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு கவிஞரும், வெற்றித் தமிழர் பேரவையின் தலைவருமான வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அவரோடு க.பா.அறவாணன், நடிகர் ராஜேஷ், ’காவ்யா’ சண்முக சுந்தரம், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து மற்றும் பேரவையை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ’திருக்குறள் மானிட வாழ்வுக்கும், உயர்வுக்கும் மிகச்சிறந்த வழியில் பங்காற்றி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொது நூலாக திருக்குறல் இருப்பதால், இதை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைத்தார்.

அத்தோடு, பத்து குறள்களை தேர்வு செய்து மெட்டமைத்து அழகாக பாடினார் கடலூரை சேர்ந்த தமிழிசை பாடகி ஜனனி.

வெப்துனியாவைப் படிக்கவும்