முத்தம்’ மறுத்த நடிகை

வியாழன், 16 ஜனவரி 2014 (14:44 IST)
நடிகர் அருள்நிதியோடு ‘உதயன்’ படத்திலும், கார்த்திக்கோடு ‘சகுனி’ படத்திலும் ஜோடியாக நடித்தவர் பிரணீதா.
FILE

அதற்குப் பின் சரியான வாய்ப்பு இல்லாததால் தற்போது கன்னடத்தில் ’மைனஸ் பாயிண்ட்’ என்ற படத்திலும், இந்தியில் ’கோல் மால்-3’, லின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.

அதேபோல மலையாளத்தில் வெளியான ‘சப்பா குரிசு’ தமிழில் ‘புலிவால்’ என்ற தலைப்பில் ரீமேக்காகும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துவிட்டார் பிரணீதா.
FILE

காரணம் இதில் பிரசன்னாவுக்கு ஜோடியாவதோடு, ’லிப் டூ லிப்’ கிஸ்ஸடிக்கும் காட்சி ஒன்று உள்ளதாம். அதனால் வேண்டாமென்று ஒதுங்கிக் கொண்டதாக கூறுகிறார்.

’ஆனாலும் தமிழில் நல்ல வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். பல நல்ல படங்கள் வந்தும், முன்பு பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். இனியும் அப்படி இருக்கமாட்டேன்’ என்கிறார் தெளிவுடன்.

வெப்துனியாவைப் படிக்கவும்