வீரம் படத்தின் முதல் 4 நாள் வசூல்!

புதன், 15 ஜனவரி 2014 (10:32 IST)
அஜித் படங்கள் எப்போதும் துவக்க மெகா வசூல்களைத் தர தவறுவதில்லை. இருப்பினும் எதிர்நாயகனாக மங்காத்தா, ஆரம்பம் படத்தில் ஒரு விதமான நாயக ரோல் இதனையடுத்து வீரத்தில் 'மண்ணின் மைந்தன்' ரோல்.இதனால் வீரம் படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது ரசிகர்களிடையே வரவேற்பும் பெற்றுள்ளது.
FILE

அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது குடும்பத்துடன் சென்று ரசிக்கும் படமாக வீரம் வரவேற்பு பெற்றுள்ளதும் அதன் வெற்றிக்கு ஒரு காரணம், மேலும் சந்தானத்தின் காமெடியும் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளதால் படத்தின் துவக்க வசூல் குறித்து வர்த்தகம் உற்சாகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனவரி 10 முதல் 13ஆம் தேதி வரையிலான 4நாட்களில் வீரர்ம் இந்தியா முழுதும் ரூ.31 முத 32 கோடி வசூலித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
FILE

தமிழகத்தில் வசூல் 'ஸ்டெடி'யாக உள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் 2ஆம் நாள் காட்சிகள் அதிக்ப்படுத்டப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்