புதுமைக் காதல்

திங்கள், 13 ஜனவரி 2014 (15:44 IST)
இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைக் களத்தில் தயாராகி வரும் படம்தான் உன் பேர் சொல்ல ஆசை. இரண்டு பெண்களுக்குமான காதல் உணர்வை அழகாகவும், வித்தியாசமான முறையிலும் கையாண்டிருக்கும் கதைதான் இது.

மிகவும் கவனமாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார் பென்சிபிஜோய். எந்த இடத்திலும் முகம் சுழிக்காதவாரு காட்சிகள் அமைத்திருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் டி.மஜீ. இந்தப் படத்தை பிளானட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாரிக்கிறார் பி.எஸ். தாரிஸ்.

மேலும், இதில் ஷாலினி, சிவகாமி, பேசில், சத்தார், ஆனந்த், போலி ஆன்ட்டி, பொன்னம்மா பாபு ஆகியோர் நடித்திருக்கிறார். படத்திற்கு தினேஷ் ஒளிப்பதிவு செய்ய, சிபு சுகுமாரன் இசையமைக்க, வசனம், பாடல்களை ஷாபிரிஸ் எழுதியிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்