டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக நடிக்கும் கமல்ஹாசன்

சனி, 11 ஜனவரி 2014 (12:56 IST)
FILE
லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் உத்தம வில்லன் படத்தில் டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல்ஹாசன் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு ஒரு மகனும் உண்டு. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க புதுமுகத்தை தேடி வருகிறார்கள்.

விஸ்வரூபம் 2 வுக்குப் பிறகு உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகரும் கமலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ரமேஷ் அரவிந்த் உத்தம வில்லனை இயக்குகிறார். ஏற்கனவே சதிலீலாவதியின் கன்னட ரீமேக்கில் ரமேஷ் அரவிந்த் கமலை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உத்தம வில்லன் கதைப்படி டீன்ஏஜ் பெண்ணின் தந்தையாக கமல் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் முதலில் ஸ்ருதிஹாசனை கமிட் செய்திருந்தனர். தற்போது கால்ஷீட் பிரச்சனையால் ஸ்ருதி படத்திலிருந்து விலக புதுமுகத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. கமலின் மகனாக நடிப்பதற்கும் புதுமுகத்தை தேடி வருகிறார்கள்.

உத்தம வில்லனின் கதை, திரைக்கதையை கமலே எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கமல் படத்துக்கு யுவன் இசையமைப்பது இதுவே முதல்முறை. அதேபோல் ஹேர்ஸ்டைலை மாற்றி மாடர்னாக மாறியிருக்கும் லிங்குசாமி இந்தப் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்