600 திரையரங்குகளில் ஜில்லா - ஆர்.பி.சௌத்ரி

வியாழன், 9 ஜனவரி 2014 (11:07 IST)
தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ஜில்லா படத்தை திரையிடயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தெரிவித்தார்.
FILE

ஜில்லா படத்தின் மீதான எதிர்பார்ப்பை சிந்தாமல் சிதறாமல் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்க்கும் விஷயத்தில் கருத்தாக இருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. கடைசிநேர விளம்பரமாக நேற்று ஜில்லா குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சௌத்ரியின் ூப்பர்குட் ஃபிலிம்ஸுக்கும், விஜய்க்கும் ஒரு ராசி உண்டு. ூப்பர்குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஷாஜகான் என எல்லா படங்களும் வெள்ளிவிழா கண்டன. ஜில்லா இவர்கள் இணையும் ஆறாவது படம். மற்ற படங்களைவிட ஜில்லா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார் சௌத்ரி.

மோகன்லால் நடிப்பில் ூப்பர்குட் ஃபிலிம்ஸ் அரண் என்ற படத்தை தயாரித்தது நினைவிருக்கலாம். மலையாளத்தில் இப்படம் கீர்த்தி சக்ரா என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜில்லா மேகன்லால், ூப்பர்குட் ஃபிலிம்ஸின் இரண்டாவது படம்.

படத்தின் மீதான நம்பிக்கை காரணமாக சம்பளம் வாங்காமல் படத்தின் கேரள உரிமையை மோகன்லால் வாங்கிக் கொண்டதாக சௌத்ரி தெரிவித்தார். அங்கு 300 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 250 திரையரங்குகள். ஆக, 1200 க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

ஜில்லா வெளியாகும் இந்த ஆண்டு ூப்பர்குட் ஃபிலிம்ஸின் வெள்ளிவிழா வருடம் என்ற தகவலையும் சௌத்ரி கிர்ந்து கொண்டார்.


வெப்துனியாவைப் படிக்கவும்