இப்படியா டீல் பண்ணுவாங்க...?

புதன், 8 ஜனவரி 2014 (16:51 IST)
டீல் என்று பெயர் வைத்த போதே, தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே 30 சதவீத வ‌ரிச்சலுகை கிடைக்கும், டீல் என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்து கடைசி நேரத்தில் பெயரை மாற்றுகிற காமெடியை தவிர்த்தால் நல்லது என எழுதியிருந்தோம். என்ன செய்வது.... சிலருக்கு காமெடி செய்தால்தான் தூக்கம் வருகிறது.
FILE

தடையற தாக்க படத்துக்குப் பிறகு அருண் விஜய் நடித்த படம்தான் இந்த டீல். கோ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாத கார்த்திகா இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சிவஞானம் படத்தின் இயக்குனர்.

படம் முடிந்து பல மாதங்களாகிறது. வியாபார பிரச்சனையால் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் ‌ரிலீஸுக்கான முயற்சிகளை எடுத்து வருகிறது தயா‌ரிப்பாளர் தரப்பு.

அவர்கள் எதிர்கொண்ட முதல் பிரச்சனை, வ‌ரிச்சலுகை. தமிழில் பெயர் இருந்தால்தான் வ‌ரிச்சலுகை. இந்த சலுகை கிடைக்காதப் படங்களை திரையரங்கு உ‌ரிமையாளர்கள் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.
FILE

இதன் காரணமாக படத்தின் பெயரை வா என்று மாற்றியுள்ளனர். இதற்கு முன் குவாட்டர் கட்டிங் படத்துக்கும் வ என்று பெயர் வைத்தது நினைவிருக்கலாம். இந்த வா வுக்கு பக்கத்தில் பெய‌ரின் கேப்ஷனாக டீலையும் சேர்த்திருக்கிறார்கள். வா டீல்.

ஆங்கிலத்தில் பெயர் இருந்தால் வ‌ரிச்சலுகை கிடையாது என்ற அடிப்படை விதிகூட தெ‌ரியாமல் படம் எடுக்கும், பெயர் வைக்கும் இவர்களை என்னவென்பது?

வெப்துனியாவைப் படிக்கவும்