பிப்.15 கோச்சடையான் பாடல்கள்

திங்கள், 6 ஜனவரி 2014 (08:57 IST)
பிப்ரவரி 15 ஆம் தேதி கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
FILE

கோச்சடையான் ஆரம்பிக்கப்பட்ட போது 2012 தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. லண்டனில் படப்பிடிப்பு முடிந்து வந்த ரஜினிகாந்த் தீபாவளிக்கு முன்பே படம் வெளியாகலாம் என்றார்.

இந்தியாவில் தயாரான முதல் பெர்பாமன்ஸ் கேப்சரிங் திரைப்படம் என்பதால்...

ரசிகர்கள் ரஜினியின் அறிவிப்பால் மகிழ்ச்சிடைந்தனர். ஆனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
FILE

படத்தின் ஸீஜி வேலைகள் திட்டமிட்டதைவிட அதிக நாள்கள் எடுத்துக் கொண்டன. சென்ற வருடம் பலமுறை பாடல்கள் வெளியீட்டு தேதியும், பட வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன. கடைசியாக டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாள் அன்று பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வழக்கம் போல அன்றும் பாடல்கள் வெளியாகவில்லை.

இத்தனை தடங்கல்களுக்குப் பிறகும்...

இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் கோச்சடையானே முதலிடத்தில் உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்காக ஐந்து பாடல்களும், ஒரு தீம் மியூஸிக்கும் போட்டு தந்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
FILE

பிப்ரவரி 15 ஆம் தேதி பாடல்கள் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரஜினி மட்டுமின்றி ரஹ்மான் ரசிகர்களையும் மகிழ்ச்சிடைய வைத்துள்ளது. இந்தமுறை தனது வாக்கை படத்தின் இயக்குனர் சௌந்தர்யா காப்பாற்றுவார் என்று நம்புவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்