ஜன.5 புலிவால் பாடல்கள் வெளியீடு

வெள்ளி, 3 ஜனவரி 2014 (13:35 IST)
வரும் ஐந்தாம் தேதி மா‌ரிமுத்து இயக்கியிருக்கும் புலிவால் படத்தின் பாடல்கள் வெளியாகிறது.
FILE

மலையாள தயா‌ரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் தயா‌ரிப்பில் வெளியான சாப்பாகுருசு படத்தின் தமிழ் ‌ரீமேக்தான் இந்த புலிவால். வினீத் சீனிவாசன், பகத் பாசில் நடித்திருந்த இந்தப் படம் மலையாளத்தில் ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. அதனை லிஸ்டின் ராதிகா சரத்குமாருடன் இணைந்து புலிவால் என்ற பெய‌ரில் தமிழில் ‌ரீமேக் செய்துள்ளார்.

வினீத் சீனிவாசன் நடித்த வேடத்தில் விமலும், பகத் பாசில் நடித்த வேடத்தில் பிரசன்னாவும் நடித்துள்ளனர். மேலும் அனன்யா, இனியா ஆகியோரும் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.

வரும் ஐந்தாம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்