அஜீத்தின் வீரமும் வீருடொக்கடேயும்

வெள்ளி, 3 ஜனவரி 2014 (12:00 IST)
அஜீத்தின் வீரம் தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. ஆனால் இரண்டும் ஒரே நாளில் வெளியாக வேண்டும் என்ற தயாரிப்பாளர்களின் விருப்பம் மட்டும் நிறைவேறும் போல் தெரியவில்லை.
FILE

தமிழின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் தெலுங்கில் உடனடியாக டப் செய்யப்பட்டு வெளியாகும். அதிகமும் தமிழில் வெளியாகும் அதேநாள். தெலுங்கு நேரடிப் படங்களின் போட்டி அதிகமிருந்தால் மட்டும் தெலுங்கு வெளியீடு தள்ளிப் போகும்.

அஜீத்தின் ஆரம்பம் ஆட்ட ஆரம்பம் என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. தமிழில் படம் வெளியாகி பல தினங்கள் கழித்தே தெலுங்குப் பதிப்பு வெளியானது. படம் அங்கு ஹிட்.

ஜனவரி 10 வெளியாக உள்ள வீரத்தை வீருடொக்கடே என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். ஆட்ட ஆரம்பம் போல வீரம் தமிழில் வெளியான பிறகே வீருடொக்கடே வெளியாக உள்ளது. அதற்குமுன் படத்தின் பாடல்களை வெளியிட உள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்