பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் யுகே, அயர்லாந்த், ஆஸ்ட்ரேலியா உள்பட பல வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் பிரியாணி படத்தின் இரண்டாவது வார இறுதி வசூல் 8,245 பவுண்ட்கள். ஏழு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
FILE
இரண்டு வாரங்கள் முடிவில் பிரியாணியின் மொத்த யுகே, அயர்லாந்த் வசூல் 54,209 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 55.52 லட்சங்கள்.
FILE
என்றென்றும் புன்னகை இந்த நாடுகளில் தனது இரண்டாவது வார இறுதியில் நான்கு திரையிடல்களில் 6,100 பவுண்ட்களை வNலித்துள்ளது. அதன் மொத்த யுகே, அயர்லாந்த் வசூல் 3,0521 பவுண்ட்கள். நமது ரூபாயில் 31.26 லட்சங்கள்.
FILE
ஆஸ்ட்ரேலியாவில் இரண்டாவது வார இறுதியில் என்றென்றும் புன்னகை மூன்று திரையிடல்களில் 6,822 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. மொத்த வசூல் 3,0972 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாய் மதிப்பில் 16.99 லட்சங்கள்.
FILE
பிரியாணி தனது இரண்டாவது வார இறுதியில் மூன்று திரையிடல்களில் 3,008 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல் 4,0722 ஆஸ்ட்ரேலிய டாலர்கள். ரூபாயில் 22.34 லட்சங்கள்.
FILE
வருட இறுதியில் வெளியான இவ்விரு படங்களும் கௌரவமான வசூலை வெளிநாடுகளில் பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.