ஒரே பட‌ம் - 60 பேர்

செவ்வாய், 31 டிசம்பர் 2013 (12:48 IST)
மேலே இருப்பது ஏதோ ஒரு படத்தின் டைட்டில் என்று எண்ண வேண்டாம். அறுபது பேர் சேர்ந்து தங்களுடைய என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுகிறார்கள். படத்தின் பெயர் மறுமுகம்.
FILE

ஏற்கனவே நாங்கள் மலையாளத்தில் கிரைம் ஸ்டோரி எனறொரு படத்தை தயாரித்து வெளியிட்டோம் எதிர்பார்த்த அளவுக்கு சரியாகப் போகவில்லை. தற்போது தமிழில் இந்தப் படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் கமல்.

மனிதனின் காதல், கண்ணீர், கோபம் என எந்த உணர்வுகளையும் ஒரு அளவுக்கு மேல் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. அப்படி வைத்தால் என்னென்ன விபரீதங்கள் நடக்கும் என்பதைத்தான் மறுமுகத்தில் சொல்லியிருக்கிறேன். இதில் டேனியல் பாலாஜி, அனூப், ப்ரீத்தி தாஸ், பானுசந்தர், உமா பத்பநாபன் மற்றும் பலர் நடிக்கிறார்கள் என்கிறார் கமல்.

வெப்துனியாவைப் படிக்கவும்