பேஸ்புக்கில் தமன்னா

திங்கள், 30 டிசம்பர் 2013 (13:56 IST)
ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பயனுள்ளதாக மாற்றிக் கொள்கிறார் நடிகை தமன்னா. சமையல் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு விதவித சமைக்க கற்று வருகிறார்.
FILE

அத்தோடு, சில அறிவுப்பூர்வமான புத்தகங்களைத் தேடித்தேடி படிக்கிறார். பிடித்தமான இசையை கேட்டு கிறங்கிக் கிடக்கிறார். அது மட்டுமில்லாமல் வலைதளத்தில் அவரைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

அத்தோடு பேஸ்புக்கில் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலும் தருகிறார். இப்படி சமைப்பதும் சாப்பிடுவதுமாக இருந்தாலும், உடலில் ஏறும் கலோரிகளை வெளியேற்ற உடற்பயிற்சிகளை மறக்காமல் செய்து எப்போதும் போலவே ஸ்லிம்மாக இருக்கிறார் தமன்னா.

வெப்துனியாவைப் படிக்கவும்