நடிகையின் ‌நி‌ச்சயதா‌ர்‌த்த‌ம்

வெள்ளி, 27 டிசம்பர் 2013 (19:04 IST)
FILE
பிரபல நடிகை சமீரா ரெட்டி. அஜித்துடன் ஜோடியாக அசல், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் விஷாலுடன் வெடி போன்ற பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் பிரபலமான மோட்டார் பைக் நிறுவன அதிபரும், தனது காதலருமான அக்‌சய் வர்தே வை திருமணம் செய்யவிருக்கிறார்.

இரண்டு வருடங்களாய் காதலித்து வந்த இந்த ஜோடி, இரு வீட்டினர் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்கான நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன் பாந்த்ராவில் உள்ள சமீரா ரெட்டியின் வீட்டில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ரகசியமாக செய்யப்பட்டிருக்கிறது.

இதையடுத்து இவர்களின் திருமணம் எளிமையான முறையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்