இவ்வாண்டின் கடைசி வெள்ளி

வெள்ளி, 27 டிசம்பர் 2013 (13:00 IST)
இன்று வெளியாகும் படங்களுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அதாவது. 2013ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமையில் வெளியான படங்கள் என்ற அந்தஸ்த்து பெறுவதுதான் அது.
FILE

அந்த வகையில் இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் ராம்கோபால் வர்மா இயக்கிய நான்தாண்டா, விக்னேஷ் நாயகனாக நடித்திரு‌க்கு‌ம் புவனக்காடு, அடுத்து பாரதி பாலகுமாரன் இயக்கத்தில் உருவான விழா.

த‌விர, தெலுங்கு மொழியிலிருந்து தமிழுக்கு மாற்றம் செய்யப்பட்ட சார் வந்தாரா படமும், மலையாளத்திலிருந்து பிரித்விராஜ் நடித்த ஜெ. டேனியல் படமும் ரிலீசாகிறது. இதில் எத்தனைப் படங்கள் வெற்றி பெறப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்