நட்புடன் ஹன்சிகா

வியாழன், 26 டிசம்பர் 2013 (11:23 IST)
சினிமாவில் உள்ள எத்தனையோ பேர்கள் சொல்லியும் சிம்புவுடனான காதலை விட்டுவிடாமல் இருந்த ஹன்சிகா, தனது நெருங்கிய, நம்பிக்கையான தோழிகள் சிலரின் வற்புறுத்தலின் பேரில் காதலை கைவிட்டுவிட்டார்.
FILE

அந்த மன வேதனைக்கு ஆறுதல் தேடத்தான் தனது பள்ளிக்கால தோழிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார் என்கின்றனர் ஹன்சிகாவுக்கு வேண்டப்பட்டவர்கள்.

அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, தோழிகளுடன் தங்கியுள்ளார். ஹாலிவுட் ஸ்டுடியோ மற்றும் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற இடங்களைப் சுற்றிப் பார்த்துவிட்டு இரண்டு வாரங்களுக்குப் பின் சென்னைக்கு திரும்பி, தொடர்ந்து மான் கராத்தே மற்றும் தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்