சென்னை பாக்ஸ் ஆபிஸ்

திங்கள், 23 டிசம்பர் 2013 (15:02 IST)
5. தலைமுறைகள்
நல்ல படம். பாலுமகேந்திராவின் முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு. நல்ல படங்களை நாங்க பார்ப்போம் என்று ஜல்லியடிக்கும் யாரும் இந்தப் படத்தை பார்க்கவில்லை. அதனால் வெளியான முதல் மூன்று தினங்களில் வெறும் 2.4 லட்சங்களை மட்டுமே படம் வசூலித்திருக்கிறது. தமிழனின் ரசனை எப்போதோ தீய்ந்து போய்விட்டது என்பதற்கு இன்னொரு உதாரணம்.

FILE

4. கல்யாண சமையல் சாதம்
எப்படியோ தட்டிமுட்டி ஒரு கோடி வசூலை எட்டியிருக்கிறது இந்த ரொமான்டிக் காமெடி. சென்ற வார இறுதியில் 3.7 லட்சங்களும், வார நாட்களில் 15.4 லட்சங்களையும் படம் வசூலித்துள்ளது. இதுவரையான சென்னை வசூல் 1.04 கோடி.

FILE

3. இவன் வேற மாதி‌ரி
விக்ரம் பிரபுக்கு இன்னொரு வெற்றி. வார இறுதியில் 34.3 லட்சங்களை வசூலித்த படம், வார நாட்களில் 1.3 கோடியை வசூலித்தது. இதுவரையான சென்னை வசூல் 3.3 கோடிகள்.

FILE

2. என்றென்றும் புன்னகை
பரவாயில்லையே என்ற பாராட்டை படம் பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் மூன்று தினங்களில் 1.15 கோடியை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

FILE

1. பி‌ரியாணி
முதலிடத்தில் பி‌ரியாணி. சென்ற வாரம் வெளியான படம் மூன்று தினங்களில் 1.17 கோடியை வசூலித்துள்ளது. அமோகமான வசூல் என்று சொல்ல முடியாது. மங்காத்தா வசூலில் முக்கால்வாசியை எட்டினாலே பெ‌ரிய ஹிட்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்