சரத், மனோஜ் கே.ஜெயன் நடிக்கும் நறுமுகை

திங்கள், 23 டிசம்பர் 2013 (12:37 IST)
தமிழ்ப் படங்கள் தமிழிலேயே கேரளாவில் வெளியாகும். இந்த ட்ரெண்ட் சமீபமாக மாறி வருகிறது. நேரம் படத்தை தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தனர். நாயகன், நாயகி, வில்லன் தவிர மற்ற கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்டது.
FILE

நஸ்ரியாவை வைத்து பாலாஜி மோகன் இயக்கும் வாய் மூடி பேசவும் படமும் நேரம் போலவே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகிறது. இதனால் மலையாள ரசிகர்களை சின்ன பட்ஜெட் படங்களும் அதிகளவில் சென்று சேர வாய்ப்பு உள்ளது.

இந்த இரு மொழி கான்செப்டில் தயாராகும் இன்னொரு படம் நறுமுகை. மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் வில்லனாகவும், மலையாளிகளுக்கு நன்கு அறிமுகமான சரத்குமார் ஹீரோவாகவும் நடிக்கும் இந்தப் படத்தின் எண்பது சதவீத காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த இளைஞன் மலேசியா செல்கையில் ஒரு பெண்ணை காதலிக்கிறான். இந்நிலையில் ஒரு பெரிய பிரச்சனையில் அவன் சிக்க வைக்கப்படுகிறான். அவனை அந்த சிக்கலில் இருந்து சரத்குமார் மீட்டெடுப்பதுதான் படத்தின் கதை. கோவை இளைஞனாக ஆகாஷும், அவர் காதலிக்கும் பெண்ணாக இஷிதாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் புதுமுகங்கள்.

தமிழ் பதிப்பில் கோவை என்றிருப்பதை மலையாள பதிப்பில் எர்ணாகுளம் என்பதாக மாற்றியிருக்கிறார்கள். இயக்குனர் மேஜர் ரவியின் உதவியாளர் ஜான் ராபின்சன் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்த வருடம் படம் திரைக்கு வருகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்