பேட்டில் ஆஃப் அல்‌ஜிர்ஸ் திரையிடல்

சனி, 21 டிசம்பர் 2013 (14:53 IST)
பேட்டில் ஆஃப் அல்‌ஜிர்ஸ் திரைப்பட ச‌ரித்திரத்தில் மிக முக்கியமான திரைப்படம். இந்தத் திரைப்படம் 21-12-13 அன்று சென்னையில் திரையிடப்படுகிறது.
FILE

1954 முதல் 1962 வரை நடந்த அல்‌ஜி‌ரியா போரை பற்றியது இந்தப் படம். பிரான்ஸ் படைகளுக்கு எ‌திராக அல்‌ஜி‌ரியா நடத்திய உக்கிரமான போர் அது.

1966ல் இந்தப் படத்தை இயக்குனர் Gillo Pontecorvo உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை முக்கியத்துவம் குறையாமல் உலக அரங்கில் இப்படம் பேசப்பட்டு வருகிறது. சினிமா விரும்பிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று.

FILE

சென்னை பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் 21-12-13 அன்று மாலை ஐந்து நாற்பத்தைந்து மணிக்கு படம் திரையிடப்படுகிறது. கலந்துரையாடலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம், அனைவரும் கலந்து கொள்ளவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்