அஜீத்தின் ஓய்வு திட்டம்

திங்கள், 2 டிசம்பர் 2013 (13:11 IST)
ஆரம்பம் படத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்துக்கு விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அஜீத்தை வலியுறுத்தியிருந்தனர். வீரம் படத்தை முடித்துவிட்டு அறுவை சிகிச்சை என்பதுதான் அவரின் திட்டமாகவும் இருந்தது. ஆனால் இப்போது அறுவை சிகிச்சையை அஜீத் தள்ளி வைத்துள்ளார்.
FILE

வீரம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. பிப்ரவரியில் கௌதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ளார். அறுவை சிகிச்சைசெய்து ஓய்வு எடுக்க சரியான நேரம். ஆனால்...

ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு எடுக்க அஜீத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
FILE

வீரம் படத்துக்காக உடல் எடையை அதிகரித்த அஜீத், கௌதம் படத்துக்காக மீண்டும் உடல் எடையை குறைக்கிறார். வெளிநாட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டே வொர்க் அவுட்டிலும் அவர் கவனம் செலுத்த உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்