அனுராக் காஷ்யப் வழியில் சேரன்

சனி, 30 நவம்பர் 2013 (17:16 IST)
FILE
குட்கா விளம்பரத்தை எல்லா சினிமாவிலும் படம் ஆரம்பிக்கும் முன்பும், இடைவேளையின் போதும் காண்பிக்க வேண்டும் என்று சென்சார் கெடுபிடி உள்ளது. இதன் காரணமாகவே ஹாலிவுட் இயக்குனர் வுடி ஆலன் தனது ப்ளூ ஜாஸ்மின் படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்கவில்லை.

இந்த குட்கா விளம்பரப் பிரச்சனை இப்போது அடுத்தக் கட்டத்தை எட்டியிருக்கிறது. தனது அக்ளி படத்தில் இந்த விளம்பரத்தை காட்டப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார் அனுராக் காஷ்யப். அவருக்கு நாலா பக்கங்களிலிருந்தும் ஆதரவு வருகிறது. வர்மா தனக்கேயு‌ரிய பாணியில் இந்த விளம்பரத்தை விளாசித்தள்ளினார். இப்போது சேரன்.

என்னுடைய படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சியில்லை. மதுவுக்கு எதிரான படம் இது. அதனால் குட்கா விளம்பரத்தை என்னுடைய படத்தில் சே‌ர்க்க வேண்டாம் என்று சென்சாரை கேட்கப் போவதாக கூறியிருக்கிறார்.

அனுராக் காஷ்யபுக்கும், சேரனுக்கும் ஒரேயொரு வித்தியாசம். அனுராக்கின் படத்தில் புகைப்பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகள் உண்டு. ஆனாலும் குட்கா விளம்பரத்தை போட மாட்டேன் என்கிறார். சேரனின் படத்தில் அவை எதுவும் இல்லை. அதனால் குட்கா விளம்பரத்திலிருந்து விலக்கு கேட்கிறார்.

நாம் அனுராக் காஷ்யபின் பக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்